வேதாளம் : லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

வேதாளம் : லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

செய்திகள் 6-Nov-2015 11:24 AM IST Chandru கருத்துக்கள்

1 லட்சத்து 40 ஆயிரம் லைக்குளை அள்ளித்தெளித்து ‘வேதாளம்’ டீஸரை தெறிக்கவிட்ட தல ரசிகர்கள் டிரைலர் எப்போது வரும் என தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வியாழக்கிழமை சென்டிமென்ட்படி வேதாளம் டிரைலர் புதன்கிழமை (நவம்பர் 4) இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து தயாரிப்பு தரப்பும் மௌனமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் யு டியூப்பில் டிரைலர் வெளியாகும் என நம்பிக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தருவதுபோன்ற தகவல் ஒன்று ட்விட்டரில் பரவி வருகிறது. ஆம்... டிரைலரே இல்லாமல் படம் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது வேதாளம் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம். ஏனெனில், டிலைரை முடித்து, சென்சாரில் அனுமதி வாங்கி வெளியிடுவதற்கான கால அவகாசம் தற்போதைய சூழ்நிலையில் இல்லை என்றே சொல்கிறார்கள். அதோடு டிரைலர் வருமா? வராதா என்பதையும் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.

இன்னொருபுறம் நேற்று ‘வேதாளம்’ படத்தை அஜித், இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உள்பட முக்கியமானவர்கள் சிலர் பார்த்துள்ளதாகத் தெரிகிறது. படம் பார்த்த அனைவருக்கும் பெரிய திருப்தி என்பதால், சந்தோஷத்திலிருக்கிறதாம் வேதாளம் டீம். அதோடு ‘யு’ சான்றிதழ் வாங்கியிருக்கும் இப்படத்திற்கு வரிச்சலுகையும் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது வேதாளம் தயாரிப்பாளருக்குக் கிடைத்த தீபாவளி போனஸ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;