‘பிரேமம்’ படத்தை ரீ-மேக் செய்யாதீர்கள்! – செல்வராகவன்

‘பிரேமம்’ படத்தை ரீ-மேக் செய்யாதீர்கள்! – செல்வராகவன்

செய்திகள் 6-Nov-2015 11:14 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி 100 நாட்களை கடந்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படம் ‘பிரேமம்’. ‘நேரம்’ படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் பார்த்துள்ளார்! ‘பிரேமம்’ குறித்து இயக்குனர் செல்வராகவன் ட்விட்டர் பக்கத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார்.

‘‘இப்படத்தை முன்னாடியே பார்த்திருக்க வேண்டும்! சூப்பர் இசை, சூப்பர் பெர்ஃபார்மென்ஸ், அதிலும் நிவின் பாலியின் நடிப்பு எக்சல்னட்! சூப்பர்ப் ஸ்கிரீன் ப்ளே! மீண்டும் பழைய காதல் நினைவுகளில் மூழ்க செய்து விட்டார் இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரன்! இப்படத்தை ரீ-மேக் செய்வதென்றால் அதை அல்ஃபோன்ஸே இயக்க வேண்டும்! அவரால் மட்டுமே அந்த ஃபீலிங்கை கொண்டு வர முடியும். வேறு யாரும் முயற்சிக்க வேண்டாம்! அதைப்போல நிவின் பாலி கேரக்டரிலும் அவரை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியவில்லை! ‘பிரேமம்’ குழுவினருக்கு என்னுடய பாராட்டுக்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டிரைலர்


;