‘ஆம்பள’ வழியில் கதகளி!

‘ஆம்பள’ வழியில் கதகளி!

செய்திகள் 6-Nov-2015 10:43 AM IST VRC கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கும் ‘பசங்க-2’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சிம்பு நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் வேலைகளும் இறுதிகட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து விஷாலை வைத்து பாண்டிராஜ் இயக்கும் ‘கதகளி’ படத்தின் படப்பிடிப்பும் வேகம் பிடித்துள்ளது. விஷாலும், பாண்டிராஜும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடிக்கிறார். ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடித்த ‘ஆம்பள’ படம் பொங்கலையொட்டி கடந்த ஜனவரி மாதம் 15-ஆம் தேதி வெளியானது. அதைப்போல வருகிற பொங்கலுக்கு ‘கதகளி’யை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள் பாண்டிராஜும், விஷாலும்! பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘பசங்க-2’ இம்மாதம் 27-ஆம் தேதி ரிலீசாகிறது. ‘இது நம்ம ஆளு’ படமும் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு ‘கதகளி’யும் ரிலீசாகவிருப்பதால் பாண்டிராஜ் இயக்கிய 3 படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரூஸ் லீ - டீசர்


;