அமெரிக்காவில் அஜித்தை முந்திய கமல்!

அமெரிக்காவில் அஜித்தை முந்திய கமல்!

செய்திகள் 6-Nov-2015 10:21 AM IST Chandru கருத்துக்கள்

தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக தயாராகி வருகிறார்கள் தல மற்றும் உலகநாயகன் ரசிகர்கள். 10ஆம் தேதியன்று அஜித்தின் ‘வேதாளம்’ மற்றும் கமலின் ‘தூங்காவனம்’ ஆகிய படங்கள் உலகமெங்கும் வெளியாகின்றன. மிகப்பெரிய ரசிகர் பட்டாளம், மூன்று சென்டர்களுக்குமான படம் ஆகிய காரணங்களால் தமிழகத்தில் தூங்காவனம் படத்தைவிட வேதாளம் படத்திற்கு பெரிய அளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கமல் படத்திற்கு 300க்கும் அதிகமான திரையரங்குகளும், அஜித் படத்திற்கு 530 திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

தமிழக நிலவரம் இப்படியிருக்க, ரஜினிக்குப் பிறகு ஓவர்சீஸில் பெரிய மார்க்கெட் இருப்பது கமல் படங்களுக்குதான் என்பதால், அமெரிக்காவில் மட்டுமே ‘தூங்காவனம்’ படத்திற்கு 102 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருக்கிறதாம். அஜித்தின் வேதாளம் 85 தியைரங்குகளில் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது. ஹாலிவுட் ஸ்டைல் ஆக்ஷன் படம் என்பதோடு, இது உலகநாயகன் படம் என்பதாலும் அஜித்தைவிட கமல் அதிகளவிலான தியேட்டர்களை கைப்பற்றியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;