Exclusive : ‘தூங்காவனம்’ - தமிழக தியேட்டர் எண்ணிக்கை?

‘தூங்காவனம்’ - தமிழக தியேட்டர் எண்ணிக்கை?

செய்திகள் 5-Nov-2015 1:02 PM IST Chandru கருத்துக்கள்

ஒருபுறம் ‘தல’ தீபாவளி என்றால், இன்னொருபுறம் ‘உலகநாயகன்’ தீபாவளி என இரட்டை கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றன தமிழக தியேட்டர்கள். ஏற்கெனவே வெளியான உத்தம வில்லன், பாபநாசம் படங்களைத் தொடர்ந்து ‘தூங்காவனம்’ பட ரிலீஸின் மூலம் இந்த வருடத்தில் ஹாட்ரிக் அடிக்கிறார் கமல். கமலுடன் இணைந்து இப்படத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத், யூகி சேது, கிஷோர் உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள். ‘ஸ்லீப்லெஸ் நைட்’ என்ற பிரெஞ்சு நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதையை, கமலிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். வேதாளம் திரைப்படம் கிட்டத்தட்ட 530 தியேட்டர்களை தமிழகத்தில் ஆக்ரமித்துவிட்டதால், ‘தூங்காவனம்’ படத்திற்கு 300 தியேட்டர்களே கிடைத்திருக்கிறதாம். தவிர இப்படம் ஹாலிவுட் ஸ்டைல் ஆக்ஷன் படம் என்பதால் ‘ஏ’ சென்டர்களில் மட்டுமே பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்படுகிறது. ‘தூங்காவனம்’ படத்திற்கு தமிழகத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் தியேட்டர் எண்ணிக்கை இதோ...

கோயம்புத்தூர் - 62
திருநெல்வேலி / கன்னியாகுமரி - 11
மதுரை - 22
வடஆற்காடு - 23
தென்ஆற்காடு - 19
செங்கல்பட்டு - 67
திருச்சி - 24
சேலம் - 41
சென்னை சிட்டி - 34

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சில சமயங்களில் - டிரைலர்


;