மீண்டும் இணைகிறது நண்பன் ஜோடி?

மீண்டும் இணைகிறது நண்பன் ஜோடி?

செய்திகள் 5-Nov-2015 12:58 PM IST VRC கருத்துக்கள்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 59-ஆவது படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. அதற்குள் விஜய்யின் அடுத்த படத்தை இவர் இயக்கப் போகிறார், அவர் இயக்கப் போகிறார் என்று பல இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது. இப்பட்டியலில் இடம் பிடித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எஸ்.ஜே.சூர்யா, மோகன் ராஜா, பரதன், ஹரி, சுந்தர்.சி முதலானோர்! ஆனால் விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பது என்று இன்னும் முடிவு செய்யாத நிலையில், அவரது அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக இலியானா நடிக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ஷங்கர் இயக்கத்தில் ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் இலியானா! அவர் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிப்பாரா? விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் போன்ற விஷயங்கள் இன்னும் முடிவு செய்யாத நிலையில் இப்போது வரும் தகவல்கள் எல்லாம் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;