அஜித்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன்!

அஜித்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன்!

செய்திகள் 5-Nov-2015 11:40 AM IST VRC கருத்துக்கள்

ஏற்கெனவே தான் இயக்கிய ‘போடா போடி’ மற்றும் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ தனுஷின் ‘மாரி’ படம் உட்பட பல படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார் இயக்குனர் விக்‌னேஷ் சிவன். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்றுள்ள படம் ‘நானும் ரௌடிதான்’. இப்படத்திற்காக அனிருத் இசையில் விக்‌னேஷ் சிவன் எழுதிய அனைத்து பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்திருப்பதால் விக்னேஷ் சிவனும் வெற்றிப்பட பாடலாசிரியர்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார். சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத படத்திற்காகவும் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதியுள்ளார். ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து பணியாற்றிய விக்‌னேஷ் சிவன், அனிருத்துடன் ‘வணக்கம் சென்னை’, ‘மாரி’, ‘நானும் ரௌடிதான்’, சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் என தொடர்ந்து பயணித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;