சத்யராஜின் ‘நைட் ஷோ’ பெயர் மாறியது!

சத்யராஜின் ‘நைட் ஷோ’ பெயர் மாறியது!

செய்திகள் 5-Nov-2015 10:40 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் ஏ.ஏல்.விஜய்யின் ‘திங் பிக் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘பால்சன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்’ இணைந்து தயாரித்து, ஆன்டனி இயக்கியுள்ள ‘நைட்ஷோ’ திரைப்படம் ‘ஒரு நாள் இரவில்’ என்ற பெயர் மாற்றத்துடன் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. மலையாள ‘ஷட்டர்’ திரைப்படத்தின் ரீ-மேக் ஆக உருவாகியிருக்கும் இப்படத்தில் சத்யராஜ், அனுமோல், யூகி சேது, வருண் (அறிமுகம்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முதலில் ‘நைட் ஷோ’ என்று பெயரிடப்பட்டு தயாரான இப்படத்தை பார்த்த சில பிரபலங்கள், ‘இப்படம் ஜனரஞ்சகமான முறையில் விறுவிறுப்புடன் எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த கதைக்கு இதைவிட வேறு ஒரு நல்ல தலைப்பு வைத்தால் நன்றாக இருக்கும்’’ என்று கூற, படத்தின் கதைக்கு ஏற்றவாறு ‘ஒரு நாள் இரவில்’ என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.
பிரபல படத்தொகுப்பாளர் ஆன்டனி முதன் முதலாக இயக்கியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜாக்சன் துரை - டிரைலர்


;