அறிமுக இன்னிங்ஸிலேயே 50 அடித்த ‘மாயா’

அறிமுக இன்னிங்ஸிலேயே 50 அடித்த ‘மாயா’

செய்திகள் 5-Nov-2015 10:20 AM IST VRC கருத்துக்கள்

‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக தயாரித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மாயா’. அறிமுக இயக்குனார் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் இப்படத்தில் நயன்தாரா இதுவரையிலும் ஏற்று நடித்திராத ஒரு பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். ஹாரர் பட வரிசையில் ‘சூப்பர் நேச்சுரல் த்ரில்லர்’ ரக படமாக அமைந்த ‘மாயா’ ரசிகர்களை வெகுவாக கவரந்தது! இந்த படத்தின் வெற்றிக்கு அஸ்வின் சரவணனின் வித்தியாசமான திரைக்கதை அமைப்பு மற்றும் இயக்கம், சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு, ரான் யோஹனின் இசை அமைப்பு ஆகியவற்றுடன் நயன்தாரா மற்றும் படத்தில் நடித்த மற்ற கலைஞர்களின் ஆத்மார்த்தமான பங்களிப்பு ஆகியவை ஒருசேர கை கோர்த்தது. கடந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி வெளியான ‘மாயா’ ரசிகர்களின் வரவேற்புடன் இன்று 50-ஆவது நாளை தொட்டு, இன்னும் சில தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து சாதனைகள் படைக்க ‘மாயா’ படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;