திருப்பதியில் சந்தானம், கிளம்பியது திருமண வதந்தி!

திருப்பதியில் சந்தானம், கிளம்பியது திருமண வதந்தி!

செய்திகள் 4-Nov-2015 4:02 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் சந்தானம தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஆஷ்னா சவேரியை காதல் திருமணம் செய்து கொண்டார் என்றும், இருவரும் தற்போது மணக்கோலத்தில் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்றும் சற்று முன் செய்தி பரவியதோடு அது சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படமும் வெளியானது. ஆனால் சந்தானம், ஆஷ்னா சவேரி திருமணம் நடக்கவில்லை என்றும் அது வெறும் வதந்தி என்றும் சந்தானம் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். அத்துடன் சந்தானம் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கும்போதும் அவர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம் என்றும் இம்மாதம் 15-ஆம் தேதி துவங்கவிருக்கும் சந்தானத்தின் புதிய படம் சம்பந்தமாக அவர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட படம் தான் அது என்றும், அதை தவறாக எடுத்து செய்தி பரப்பி விட்டார்கள் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’ ஆகிய படங்களை தொடர்ந்து சந்தானம் நடிக்கும் அடுத்த படத்திலும் அவருடன் ஆஷ்னா சவேரி இணைந்து நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;