8 நாட்களில் உருவான படம்!

8  நாட்களில் உருவான படம்!

செய்திகள் 4-Nov-2015 3:49 PM IST VRC கருத்துக்கள்

ஒரே இரவில் நடப்பது மாதிரி, ஒரு முழுநீள க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கும் படம் ‘கிரிங் கிரிங்’. செய்யாத கொலைக் குற்றத்தில் சிக்கிக் கொள்கிற நாயகன் அதிலிருந்து மீளப் போராடுகிறான். அவனது தவிப்பும், பதைபதைப்பும், போராட்டமும் தான் இப்படத்தின் கதையாம்!

நாயகனாக ரோஹன் நடித்திருக்கிறார். நாயகியாக காவ்யா நடித்துள்ளார். படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் ராகுல். இவர் வின்சென்ட் செல்வாவின் மாணவர். படத்தில் நடித்துள்ள நாயகன் ரோஹன் உள்பட பெரும்பாலான நடிகர்களும் கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள்.

படத்தின் பரபரப்புக்கு வேகத்தடையாக இருக்குமென்று பாடல்கள் படத்தில் இடம் பெறவில்லை.சென்னை, தூத்துக்குடி போன்ற இடங்களில் 8 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குநர் ராகுல். இப்படத்திற்கு துவாரகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஜூடு இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பை சிவதர்மா கவனித்துள்ளார். இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இப்படம் விரைவில் ரிலிசாகுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யூ டர்ன் - ட்ரைலர்


;