பிரசாந்துடன் இணையும் சத்யராஜ், பிரகாஷ்ராஜ்!

பிரசாந்துடன் இணையும் சத்யராஜ், பிரகாஷ்ராஜ்!

செய்திகள் 4-Nov-2015 3:32 PM IST VRC கருத்துக்கள்

தற்போது தியாகராஜன் தயாரிப்பில் ‘சாஹசம்’ படத்தில் நடித்து வருகிறார் பிரசாந்த். இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ஹிந்தியில் அக்‌ஷய் குமார் நடித்து சூப்பர் ஹிட்டான ‘ஸ்பெஷல்-26’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் பிரசாந்த். ‘சாஹசம்’ பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே ‘ஸ்பெஷல்-26’ மற்றும் கங்கணா ரணாவத் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘குயின்’ ஆகிய ஹிந்தி படங்களின் தமிழ் ரீ-மேக் உரிமையை கைபற்றியிருந்தார் தியாகராஜன். இந்த தகவலை ஏற்கெனவே நமது இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

பிரசாந்தின் ‘சாஹசம்’ படம் ரிலீசானதும் ‘ஸ்பெஷல்-26’ தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார் தியாகராஜன். பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரசாந்துடன் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ‘காஞ்சனா-2’ல் நடித்த ஜெயா ஆனந்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவக்கத்தில் துவங்கும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.0 ட்ரைலர்


;