சர்வதேச திரைப்பட விழாவில் ‘ரேடியோ பெட்டி’

சர்வதேச திரைப்பட விழாவில் ‘ரேடியோ பெட்டி’

செய்திகள் 4-Nov-2015 11:11 AM IST VRC கருத்துக்கள்

ஹரி விஸ்வநாத் இயக்கியுள்ள படம் ‘ரேடியோ பெட்டி’. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில், 15 நாட்களில், சிறிய பட்ஜெட்டில் எடுத்து முடிக்கப்பட்டுள்ள படமிது. வேலையிலிருந்து ஓய்வுபெற்ற நிலையிலிருக்கும் முதியவர் ஒருவருக்கும், நவநாகரீக மோகம் கொண்ட அவரது மகனுக்கும் இடையில் நடக்கிற உணர்ச்சி மிகு கதையாம் ‘ரேடியோ பெட்டி’. இந்த படம் அடுத்த மாதம் கோவாவில் நடைபெறவிருக்கிற இந்தியாவின் 46-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்திய பனோரமா பிரிவில் திரையிட தேர்வாகியிருக்கும் ஒரே தமிழ் திரைப்படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற புசான் திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 பகுதி 2- தி ரோட் ட்ரிப் வீடியோ


;