சிம்ஹா, ரேஷ்மி மேனன் நிச்சயதார்த்தம் - கருணாகரன் வாழ்த்து!

சிம்ஹா, ரேஷ்மி மேனன் நிச்சயதார்த்தம் - கருணாகரன் வாழ்த்து!

செய்திகள் 4-Nov-2015 10:45 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் பாபி சிம்ஹாவுக்கும், நடிகை ரேஷ்மி மேனனுக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது என்றும், அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள் என்றும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் இந்த தகவல்களை அவர்கள் இருவரும் மறுக்கவும் இல்லை, அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் இல்லை. இந்நிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வருகிற 8-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

திருமண நிச்சயதார்த்ததை தொடர்ந்து இவர்களது திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருப்பதை முன்னிட்டு நடிகர் கருணாகரன் ட்விட்டர் மூலம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உறியடி 2 - டீஸர்


;