தனுஷ் + விஜய்சேதுபதி + செல்வராகவன் : புதிய கூட்டணியா?

தனுஷ் + விஜய்சேதுபதி + செல்வராகவன் : புதிய கூட்டணியா?

செய்திகள் 4-Nov-2015 10:18 AM IST Chandru கருத்துக்கள்

‘நானும் ரௌடிதான்’ படத்தின் அதிரிபுதிரி வெற்றிக்குப் பிறகு தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என ஏற்கெனவே தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தையும் ‘நானும் ரௌடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனே இயக்குவார் என பெரும்பாலானோர் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று கசிந்திருக்கிறது. ஆம்... விஜய்சேதுபதியை இயக்கப்போவது தனுஷின் அண்ணன் செல்வராகவன்தானாம்.

சிம்பு நாயகனாக நடிக்க செல்வராகவன் இயக்கி வந்த ‘கான்’ படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்கள். இந்த அறிவிப்பிற்குப் பிறகு வேறு எந்த புதிய அறிவிப்பையும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்தார் செல்வா. ‘கான்’ படத்தை மீண்டும் துவங்குவதற்குத் தேவையான பட்ஜெட்களை புரட்டுவதற்குள்ளாகவே, கிடைத்த கேப்பில் விஜய்சேதுபதியை வைத்து படம் ஒன்றை இயக்கிவிடலாம் என செல்வா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதையும் செல்வாவின் தம்பி தனுஷே தயாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;