இணையதள ரசிகர்களுக்காகவே கமல் உருவாக்கும் படம்!

இணையதள ரசிகர்களுக்காகவே கமல் உருவாக்கும் படம்!

செய்திகள் 4-Nov-2015 10:10 AM IST Chandru கருத்துக்கள்

இடையிடையே காமெடிப் படங்களில் நடித்தாலும், அவ்வப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் புதிய புதிய கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கமல்தான் இங்கிருப்பவர்களுக்கெல்லாம் உலகநாயகன். சினிமாவுக்கான எல்லாவித இலக்கணங்களுக்கும் முன்னோடியாக இருப்பவர் கமல்ஹாசன்தான். இப்போதுகூட ‘ஸ்லீப்லெஸ் நைட்’ என்ற பிரெஞ்ச் நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ‘தூங்கா வனம்’ படத்திற்காக கமல் ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படம் தெலுங்கில் ‘சீக்கட்டி ராஜ்ஜியம்’ என்ற பெயரில் ஒரே சமயத்தில் உருவாகிவருகிறது. நவம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ‘சீக்கட்டி ராஜ்ஜிய’த்தின் புரமோஷனுக்காக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், ‘‘இணையதள ரசிகர்களுக்காகவே விரைவில் படம் ஒன்றை உருவாக்கவிருக்கிறோம். இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ், இதர பிரச்சனைகள் எதுவும் வருவதற்கு வாய்ப்பில்லை என நினைக்கிறேன்!’’ என குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ


;