ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா படங்களின் மூலம் வரிசையாக உதயநிதிக்கு மூன்று ஹிட் ஆல்பங்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். தற்போது எமி ஜாக்சனுடன் இணைந்து உதயநிதி நடிக்கும் ‘கெத்து’ படத்திற்கும் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், மிஸ்ட்ரி த்ரில்லராக உருவாகிவரும் ‘கெத்து’ படத்தின் பாடல்கள் இந்த மாத இறுதியில் வெளியாகும் என ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே உதய் & ஹாரிஸ் கூட்டணியில் வெளிவந்த 3 ஆல்பங்களும் ஹிட் என்பதால், இந்த ‘கெத்து’ ஆல்பத்திற்காகவும் ரசிகர்கள் வெகுவாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். படம் டிசம்பர் 18ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதிராவ், இயக்குனர் ராம் ஆகியோர் நடிக்கும்...
சென்னையில் பிரபல வியாபார நிறுவனமாக விளங்கி வரும் நிறுவனம் நியூ சரவணா ஸ்டோர்ஸ் பிரம்மாண்டமாய். இதன்...
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதிராவ், இயக்குனர் ராம் ஆகியோர் நடிக்கும்...