‘24’ முடிந்தது - நன்றி தெரிவித்த சூர்யா!

‘24’ முடிந்தது - நன்றி தெரிவித்த சூர்யா!

செய்திகள் 3-Nov-2015 12:07 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘24’ படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் (2-11-15) முடிந்துவிட்டது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சூர்யா, படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார். சூர்யாவின் ‘2டி’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். தமிழில் ‘அலை’, ‘யாவரும் நலம்’ ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார் தெலுங்கில் இயக்கிய ‘மனம்’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அந்த படத்தை தொடர்ந்து விக்ரம் குமார் தமிழில் இயக்கும் மூன்றாவது படம் ‘24’. க்ரைம், த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. சூர்யா, விக்ரம் குமார், சமந்தா, ஏ.ஆர்.ரஹ்மான் என பெரும் கூட்டணி அமைந்துள்ள இப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;