விஜய்சேதுபதி, மணிகண்டனுடன் இணையும் கே!

விஜய்சேதுபதி, மணிகண்டனுடன் இணையும் கே!

செய்திகள் 3-Nov-2015 11:16 AM IST VRC கருத்துக்கள்

‘காக்கா முட்டை’ பட வெற்றியை தொடர்ந்து மணிகண்டன் இயக்கியுள்ள படம் ‘குற்றமே தண்டனை’. விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து மணிகண்டன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பினை ‘முகமூடி’, சமீபத்தில் வெளியான ‘கிருமி’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ள ‘கே’யிடம் வழங்கியுள்ளார் மணிகண்டன்! ‘காக்கா முட்டை’யில் ஜி.வி.பிரகாஷ் குமாருடனும், ‘குற்றமே தண்டனை’யில் இளையாராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ள மணிகண்டன் தனது அடுத்த படத்தில் விஜய்சேதுபதி, கே ஆகியோருடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு முடிந்ததும் இப்படம் சம்பந்தமான அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜூங்கா - டைட்டில் டீசர்


;