‘பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்!’ - இயக்குனர் முத்தையா

‘பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்!’ - இயக்குனர் முத்தையா

செய்திகள் 3-Nov-2015 11:04 AM IST VRC கருத்துக்கள்

‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. இவர் பெயரில் யாரோ சிலர் சமூக வலைதளங்களில் பொய்யான கணக்குகளை துவங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இயக்குனர் முத்தையா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

‘‘நான் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற எந்த சமூக வலைதளங்களையும் பயன்படுத்தியதில்லை. எனது பெயரில் சிலர் பொய்யான கணக்குகளை துவங்கி, அதில் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளனர். அதே போன்று எனது பெயரில் தொடர்பு கொண்டு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி மோசடி செய்வது போன்ற தகவல்கள் என்னிடம் வருகிறது. அதனால் யாரும் என்னை நேரில் சந்திக்காமல் எனது பெயரில் வரும் எந்த ஒரு பொய்யான தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம். அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;