டெல்லி கணேஷ் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம்!

டெல்லி கணேஷ் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம்!

செய்திகள் 3-Nov-2015 10:35 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக நடிகராக விளங்கி வரும் டெல்லி கணேஷின் மகன் மகா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘என்னுள் ஆயிரம்’. இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவியாளராக இருந்த கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் மகாவுக்கு ஜோடியாக மரினா மைக்கேல் நடித்துள்ளார். மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அமர் அக்பர் ஆன்டனி’ படத்தில் பிருத்திவிராஜுக்கு ஜோடியாக நடித்த மரினா நடிக்கும் முதல் தமிழ் படம் இது. ‘என்னுள் ஆயிரம்’ படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் பத்திரைகையாளர்களிடம் தனது மகனை அறிமுகப்படுத்தி வைத்தார் டெல்லி கணேஷ். அப்போது அவர் பேசும்போது,

‘‘ஒரு புதுமுகமாக இருந்த என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் மறைந்த கே.பாலச்சந்தர் சார் தான். என் மகனை நானே ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தை தயாரித்து கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறேன். நான் இதுவரையில் எனக்காக ஒரு பத்திரைகையாளர் சந்திப்பை வைத்ததில்லை. அப்படி வைக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியதும் இல்லை. இருந்தாலும் நீங்கள் எனக்கு தொடர்ந்து தந்த ஆதரவு காரணம் தான் நான் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறேன். இப்படத்தின் மூலம் உங்களிடம் என் மகனை அறிமுகப்படுத்துகிறேன். அவனுக்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இயக்குனர் ஏ.எல்.விஜயிடம் உதவியாளராக இருந்த கிருஷ்ணகுமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். காதல் கலந்த த்ரில்லர் கதை இது! எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக இயக்கியிருக்கிறர் கிருஷ்ணகுமார். இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

இந்த படத்திற்கு பிரபல மலையாள பட இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இசை அமைக்க, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளர் அதிசயா ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘குக்கூ’ படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்த ஷண்முகம் வேலுசாமி படதொகுப்பு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரொக்கெற்றி - தி நம்பி effect டீஸர்


;