‘காதல் மன்னன்’ அவதாரம் எடுக்கும் ஜீவா!

‘காதல் மன்னன்’ அவதாரம் எடுக்கும் ஜீவா!

செய்திகள் 2-Nov-2015 4:43 PM IST VRC கருத்துக்கள்

‘யான்’ படத்திற்குப் பிறகு திருநாள், கவலை வேண்டாம் என இரண்டு படங்களில் பிஸியாக இருக்கிறார் ஜீவா. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து முத்துக்குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கு மறைந்த நடிகர் ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் பெயரையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். இப்படத்தின் தலைப்பிற்காக மறைந்த நடிகர் திரு.ஜெமினி கணேசன் அவர்களின் குடும்பத்தினரிடம் முறையாக அனுமதி பெற்றுள்ள படக்குழு விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

தயாரிப்பு, உடன் நடிப்பவர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவருமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;