நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீவாபளி பரிசு!

நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீவாபளி பரிசு!

செய்திகள் 2-Nov-2015 2:34 PM IST VRC கருத்துக்கள்

தீபாவளியை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல் உட்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது!!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிதாக பொறுபேற்றுள்ள நிர்வாகிகள் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் (3,500 நபர்கள்) விழாக்கால பரிசாக ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு சேலையும் இதனுடன் ஒரு பை இனிப்பும் வழங்கப்படவுள்ளது. இந்த பரிசுப் பொருட்கள் அனைத்தும் உறுப்பினர்களின் வீட்டிற்க்கே சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடக நடிகர்கள் பற்றிய விவரம் அறியும் கணக்கெடுப்பு விரைவில் துவங்கவுள்ளது. நடிகர் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் பத்து பேர் தனி குழுக்களாக மாவட்டவாரியாக பிரிக்கப்பட்டு, எல்லா மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள நாடக நடிகர்களை, நடிகைகளை அவர்களுடைய வீட்டிற்கே சென்று சந்தித்து அவர்களது வாழ்வாதாரம் பற்றியும், வருமானம் மற்றும் அவர்களது தற்போதைய நிலை, செய்யும் தொழில் போன்றவைகளை சரியாக கணக்கெடுத்து தலைமைக்கு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான பணி தீபாவளி பண்டிகைக்கு பின் துவங்கி செய்து முடிக்கப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;