இணைகிறார்கள் விஷால், ராதாரவி!

இணைகிறார்கள் விஷால், ராதாரவி!

செய்திகள் 2-Nov-2015 12:03 PM IST VRC கருத்துக்கள்

‘கொம்பன்’ பட வெற்றியை தொடர்ந்து முத்தையா இயக்கும் படம் ‘மருது’. விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஷாலுடன் முதன் முதலாக ஜோடி சேருகிறார் ‘ஊதா கலர் ரிப்பன்’ புகழ் ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் மற்றொரு விசேஷமான விஷயம் இப்படத்தில் விஷாலுடன் ராதாரவியும் இணைந்து நடிக்கவிருக்கிறார் என்பது! நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் ராதாரவியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி கண்டவர் விஷால் என்பதோடு, அந்த தேர்தலில் அதிகமாக பேசப்பட்டவர்களும் இவர்களே! அதனால் இவர்கள் இவரும் உடனே ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருப்பது கோலிவுட்டில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, இது நல்ல ஒரு துவக்கம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. ‘மருது’வில் விஷாலுடன் ராதாரவி முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறராம்! இதனை இயக்குனர் முத்தையாவே ‘டாப் 10 சினிமா’வுக்கு தெரிவித்தார்.

‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ பேனரில் அன்புச் செழியன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 15-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறர். வேல்ராஜ ஒளிப்பதிவு செய்கிறார். ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ வரிசையில் இப்படமும் கிராமத்து குடும்ப கதையாக உருவாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;