ஓம் சாந்தி ஓம் – விமர்சனம்

பத்தோடு பதினொன்று!

விமர்சனம் 2-Nov-2015 11:02 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Surya Prabaakar
Production : 8 Point Entertainment
Starring : Srikanth, Neelam Upadhyaya
Music : Vijay Ebenezer
Cinematography : Bhaskaran K.M
Editing : Vivek Harshan

பேய் பட வரிசையில் மற்றுமொரு படம்! ஸ்ரீகாந்த நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் அமெரிக்கன் டிவி சீரியலை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று கூறப்படுகிறது. ‘ஓம் சாந்தி ஓம்’ எப்படிப்பட பேய் படம்?

கதைக்களம்

திருச்சிக்கு போகிற ஒரு பஸ் பெரிய விபத்துக்குள்ளாகிறது. அந்த பஸ்ஸில் பயணம் செய்த ஸ்ரீகாந்த் மட்டும் தப்பித்து வெளியே வருகிறார். பிறகு 6 மாதம் கழித்து சொல்லப்படும் கதையில் ஸ்ரீகாந்த் ஒரு கார் ஷோரூமில் வேலை செய்கிறார். அங்கு வேலையில் சேரும் அழகான பெண் நீலம் உபாதாயாவுடன் காதல் கொள்கிறார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் கண்களுக்கு மட்டும் தென்படும் 5 ஆத்மாக்கள் (பேய்கள்...) அவரை பின் தொடர்ந்து தங்களது லட்சியங்களை நிறைவேற்றித்தர சொல்கிறார்கள்! அந்த ஆத்மாக்கள் யார் யார்? அவர்கள் ஏன் ஸ்ரீகாந்தை மட்டும் பின் தொடர்ந்து உதவி கேட்கிறார்கள்? என போன்ற பல கேள்விகளுக்கு விடை தரும் படமே ஓம் சாந்தி ஓம்.

படம் பற்றிய அலசல்

அமெரிக்க டிவி சீரியலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது என்பதோடு சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘மாஸ்’ பட கதையையும் இப்படம் ஞாபகப்படுத்துகிறது. வழக்கமான பயமுறுத்தல் Ghost படங்களிலிருந்து மாறுபட்ட வகையில் இப்படத்தின் கதை சொல்லப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாதியில் ரசிக்க ததக்க பல காட்சிகள் அமைந்துள்ளது. ஆனால் இடைவேளைக்கு பிறகு வரும் சில சென்டிமென்ட் காட்சிகளை தவிர்த்து பார்த்தார்ல் அபரிமிதமான லாஜிக் மீறல்கள், தேவையில்லாமல் காட்சிகளை இழுத்திருப்பது என படம் கொஞ்சம் போரடிக்கவே வைக்கிறது. படத்தில் கொஞ்சம் என்டர்டெயின்மென்ட் தருவது ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகளும், விஜய் எபிநேசர் இசையில் அமைந்துள்ள ஒரு சில பாடல் காட்சிகள் மட்டுமே! மற்றபடி ஏற்கெனவே வெளிவந்த பேய் படங்களிலிருந்து இப்படம் எந்த வகையிலும் ரசிகர்களுக்கு மாறுபட்ட படமாக, பொழுதுபோக்கு படமாக தருவதில் இயக்குனர் டி.சூர்யபிரபாகர் தவறி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

நடிகர்களின் பங்களிப்பு

ஸ்ரீகாந்தை பொறுத்தவரை கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். அவரது நடிப்பு குறித்து குறிப்பிடும்படியான பல காட்சிகள் படத்தில் உள்ளன. ஸ்ரீகாந்தின் காதலியாக வரும் நீலம் உபாதாயா ரொமான்டிக் காட்சிகளில் கவர்கிறார். ஸ்ரீகாந்தின் நண்பராக வந்து காமெடி செய்யும் மலையாள நடிகர் பைஜுவின் குரல் அந்த கேரக்டருக்கு பொருந்தவில்லை. ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் எப்பவும் போல இப்படத்திலும் ‘கல கல’ ராஜேந்திரன் தான்! ஜூனியர் பாலையா, ஆடுகளம் நரேன் ஆகியோரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

பலம்

1.நான் கடவுள் ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள்
2.விஜய் எபிநேசர் இசையில் அமைந்துள்ள மூன்று பாடல்கள்
3.சில சென்டிமென்ட் காட்சிகள்

பலவீனம்

1.எந்த சர்ப்ரைஸும் இல்லாத திரைக்கதை அமைப்பு
2.படத்தின் அதிகபடியான் நீளம்
3.சூர்யாவின் மாஸ் படத்தை நினைவு படுத்துவது

மொத்தத்தில்

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் பேசப்பட்டிருக்கும்.

ஒரு வரி பஞ்ச்: பத்தோடு பதினொன்று!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;