அஜித்தின் ‘வேதாளம்’ தீபாவளியை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி உலகம் முழுக்க பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கிறது. ஆந்திராவில் வெளியாகும் இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு ‘ஆவேஷம்’ என்று டைட்டில் வைத்துள்ளார்கள். தமிழில் வெளியாகிற அதே நாளிலேயே தெலுங்கிலும் இப்படம் வெளியாவதால் ஆந்திராவில் உள்ள அஜித் ரசிகர்களுக்கு இந்த வருட தீபாவளி ஸ்பெஷல் தீபாவளி தான். ‘சிறுத்தை’ சிவா இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன் ஸ்ருதி ஹாசன். லட்சுமி மேனன், சூரி முதலானோர் நடித்திருக்க அனிருத் இசை அமைத்துள்ளார். டீஸர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘வேதாள’த்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதமும் கிடைத்திருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள் ‘வேதாளம்’ படக்குழுவினர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...