3 வேடங்களில் மோகன்லால் நடிக்கும் ‘71 WAR’

3 வேடங்களில் மோகன்லால் நடிக்கும் ‘71 WAR’

செய்திகள் 31-Oct-2015 3:03 PM IST VRC கருத்துக்கள்

‘கர்மயோதா’ ‘கீர்த்திசக்ரா’ (தமிழில் ‘அரண்’) ‘கந்தஹார்’, ‘குருக்‌ஷேத்ரா’ உட்பட பல மலையாள படங்களை இயக்கியவர் மேஜர் ரவி. இராணுவத்தில் மேஜர் பதவி வகித்த அனுபவம் பெற்ற மேஜர் ரவி மோகன்லாலை ஹீரோவாக நடிக்க வைத்து இதற்கு முன் இயக்கிய நான்கு படங்களுமே இராணுவ பின்னணியில் எடுக்கப்பட்ட படங்களாகும். அந்த வரிசையில் மோகன்லாலை வைத்து மேஜர் ரவி மீண்டும் ஒரு இராணுவ கதையை படமாக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘71 WAR’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேஜர் ரவியும், மோகன்லாலும் 5-ஆவது முறையாக இணையும் இப்பம் 1971-ல் நடந்த இந்தியா, பாகிஸ்தான் போர் பின்னணியை வைத்து எடுக்கப்படும் படமாம்! இப்படத்தில் மோகன்லால் 3 மாறுபட்ட கேர்கடர்களில் நடிக்கவிருக்கிறார். அதில் ஒரு கேரக்டர் அவர் ஏற்கெனவே ‘குருக்‌ஷேத்ரா’, ‘கீர்த்தி சக்ரா’ ஆகிய படங்களில் ஏற்று நடித்த மேஜர் மகாதேவனாகவே நடிக்கிறாராம். இந்திய இராணுவத்தில் கௌரவ பதவி வகித்து வருபவர் மோகன்லால் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ரெட் ரோஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் ஹனீஃப் முகம்மது தயாரிக்கும் இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். நிறைய பொருட் செலவில் தயாராகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஃபிப்ரவரி மாதம் துவங்கவிருக்கிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பும் இந்திய, பாகிஸ்தான் எல்லை பிரதேசங்களில் நடைபெறவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;