ஹரி இயக்கத்தில் விஜய்?

ஹரி இயக்கத்தில் விஜய்?

செய்திகள் 31-Oct-2015 1:24 PM IST VRC கருத்துக்கள்

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தனது 59வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் அடுத்த வருடம் தான் வெளியாகும். அதற்குள்ளாகவே விஜய்யின் அடுத்தடுத்த படங்களை யார் இயக்குவார்கள் என்ற யூகத் தகவல்கள் தற்போது கோலிவுட்டை வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில் ஏற்கெனவெ விஜய்யை வைத்து ‘குஷி’ யை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா, விஜய் நடிப்பில் ‘வேலாயுதம்’ படத்தை இயக்கிய மோகன் ராஜா, விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் முதலானோரின் பெயர்கள் அடிப்படுகிறது.

ஆனால் நமக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் படி விஜய் விரைவில் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. விஜய் நடித்த ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் பி.டி.செல்வகுமார். இவர் தற்போது தனது ‘PTS Film International’ நிறுவனம் சார்பாக ‘போக்கிரி ராஜா’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். ஜீவா, ஹன்சிகா மோத்வானி, சிபிராஜ் முதலானோர் நடிக்கும் இப்படத்தை ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் பி.டி.செல்வகுமார். ஏற்கெனவே இது சம்பந்தமாக இருவரும் பேசி முடிவும் செய்துள்ளார்கள்.

பல படங்களின் வியாபார விஷயங்களில் உறுதுணை புரிந்துள்ளவர் பி.டி.செல்வகுமார் என்பதால் அவருக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அந்த விநியோகஸ்தர் நண்பர்கள் எல்லாம், ‘ஹரி இயக்கும் படத்தில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்கள். அதனால் பி.டி.செல்வகுமார் விருப்பபடி விஜய்க்கு ஏற்ற மாதிரியான ஒரு கதையை தயார் பண்ணுவதில் முனைப்போடு இருக்கிறாராம் ஹரி! அப்படி ஹரி தயார் செய்யும் கதை விஜய்க்கு பிடிக்குமானால் ‘போக்கிரி ராஜா’ படத்தை தொடர்ந்து பி.டி.செல்வகுமார் தயாரிக்க, ஹரி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
தற்போது, சூர்யா நடிப்பில் தான் இயக்கவிருக்கும் ‘சிங்கம்-3’ பட வேலைகளில் பிசியாக இருக்கும் இயக்குனர் ஹரி, அப்பட வேலைகள் அனைத்தும் முடிந்ததும் பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் பட வேலைகளில் இறங்குவார் என்று தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;