மீண்டும் ஜீவா, கே.வி.ஆனந்த் கூட்டணி?

மீண்டும் ஜீவா, கே.வி.ஆனந்த் கூட்டணி?

செய்திகள் 31-Oct-2015 11:11 AM IST VRC கருத்துக்கள்

‘அனேகன்’ படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்கிறார் என்றும், விஷால் நடிக்கிறார் என்றும் முதலில் தகவல் வெளியானது. அதன் பிறகு ‘ஜெயம்’ ரவி நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல்களில் சிறிதும் உண்மையில்லை என்று மறுத்தார் இயக்குனர் கே.வி.ஆனந்த். அத்துடன் தனது அடுத்த படத்திற்கான கதை இன்னும் முழுமை பெறவில்லை என்றும், கதை ரெடி செய்த பிறகே ஹீரோ யார் என்பதை முடிவு செய்வேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் லேட்டஸ்டாக நமக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின்படி கே.வி.ஆனந்த் தனது அடுத்த படத்திற்கான கதையை ரெடி செய்து விட்டார் என்றும், அந்த கதையில் தன்னுடன் ‘கோ’ படத்தில் இணைந்த ஜீவாவையே ஹீரோவாக நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளார் என்றும், அது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் தற்போது நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஜீவா தற்போது ‘திருநாள்’ மற்றும் ‘போக்கிரிராஜா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;