ஆச்சரியத்தை ஏற்படுத்திய ‘வேதாளம்’ சென்சார் ரிசல்ட்!

ஆச்சரியத்தை ஏற்படுத்திய ‘வேதாளம்’ சென்சார் ரிசல்ட்!

செய்திகள் 30-Oct-2015 4:51 PM IST Chandru கருத்துக்கள்

‘வேதாளம்’ படத்தின் டீஸர் வெளிவந்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அப்படத்தை பெரும்பாலானோர் ஓர் முழுமையான ஆக்ஷன் படம் என்றே கருதினர். இதனால் சென்சாரில் ‘வேதாளம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைக்குமா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ‘வேதாளம்’ படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் சிவா சொன்னதுபோல ‘வேதாளம்’ படம் குடும்பத்துடன் பார்க்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையே இந்த ரிசல்ட் காட்டுகிறது. ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பதால் 30% கேளிக்கை வரி தள்ளுபடி செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறதாம் ‘வேதாளம்’ படத்திற்கு. விரைவில் வெளிவரவிருக்கும் டிரைலரில் ‘வேதாளம்’ படத்தின் லக்ஷ்மிமேனன் சம்பந்தப்பட்ட சென்டிமென்ட் காட்சிகளும் வெளிப்படும் என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ‘வேதாளம்’ படத்தின் ரன்னிங் நேரம் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் என்ற தகவலும் தற்போது வெளிவந்திருக்கிறது.

‘வேதாளம்’ படத்துடன் நவம்பர் 10ஆம் தேதி திரைக்கு வரும் கமலின் ‘தூங்காவனம்’ படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;