தனுஷுக்கு ஜோடியாகிறாரா த்ரிஷா?

தனுஷுக்கு ஜோடியாகிறாரா த்ரிஷா?

செய்திகள் 30-Oct-2015 4:02 PM IST VRC கருத்துக்கள்

‘தங்கமகன்’, மற்றும் பிரபு சாலமன் இயக்கும் படம் ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ், துரைசெந்தில குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தனுஷ் அண்ணன், தம்பி என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதில் அண்ணன் கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. தனுஷ், த்ரிஷா இதுவரை எந்த படத்திலும் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் துரைசெந்தில் குமார் இயக்கும் படத்தில் தனுஷுடன் த்ரிஷா இணைந்து நடிக்கிறார் என்பது உண்மையா என்பதை அறிய நாம் த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, இன்னும் முடிவாகவில்லை, முடிவானதும் சொல்கிறேன்’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;