கமலுடன் மோதும் ஸ்ருதி!

கமலுடன் மோதும் ஸ்ருதி!

செய்திகள் 30-Oct-2015 2:02 PM IST VRC கருத்துக்கள்

இந்த வருட தீபாவளிக்கு முக்கியமான இரண்டு நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வெளியாகவிருக்கிறது. கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’, அஜித் நடித்துள்ள ‘வேதாளம்’ ஆகிய இரண்டு படங்களும் தீபாவளி திருநாளான நவம்பர் 10-ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படம் சென்சார் செய்யப்பட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றிருக்கிறது. ‘துங்காவனம்’ படத்தில் கமல்ஹாசனுடன் த்ரிஷா, ஆஷா சரத், பிரகாஷ்ராஜ் முதலானோர் நடித்துள்ளார்கள். ‘வேதாளம்’ படத்தில் அஜித்துடன் ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். கமலின் ‘தூங்காவனம்’ படமும், ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ‘வேதாளம்’ படமும் ஒரே நாளில் வெளியாகவிருப்பதால கமல்ஹாசனுக்கும் அவரது மகளான ஸ்ருதி ஹாசனுக்கும் இடையில் போட்டி எற்பட்டுள்ளது. தந்தை, மகள் நடித்த இருவேறு படங்கள் ஒரே நாளில் வெளியாவது என்பது அரிதான விஷயம்! அது இந்த தீபாவாளி தினத்தில் அரங்கேறப் போகிறது.

கமல் நடித்த ‘பம்மல் கே. சம்மந்தம்’, அஜித் நடித்த ‘ரெட்’ ஆகிய படங்கள் 2002-ல் பொங்கலையொட்டி ரிலீசானது. இதனை தொடர்ந்து இந்த தீபாவளியன்று கமல், அஜித் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;