விஜய்யின் இயக்குனர் பட்டியலில் ‘ATM’ பரதன்!

விஜய்யின் இயக்குனர் பட்டியலில் ‘ATM’ பரதன்!

செய்திகள் 30-Oct-2015 10:12 AM IST Chandru கருத்துக்கள்

தற்போது அட்லியின் இயக்கத்தில் தனது 59வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ‘இளையதளபதி’ விஜய். இப்படமே அடுத்த வருடம்தான் திரைக்கு வரவிருக்கிறது. ஆனால், அதற்குள்ளாகவே அவரின் 60, 61, 62வது படங்களை யார் இயக்குவார்கள் என்ற பெரிய பட்டியல் ஒன்று கோலிவுட்டை வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் ‘குஷி’ இயக்குனர் எஸ்.ஏ.சூர்யா, ‘வேலாயுதம்’ இயக்குனர் மோகன் ராஜா, சசிகுமார் ஆகியோர் ஏற்கெனவே இடம்பிடித்திருக்கிறார்கள். தற்போது இதில் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதனும் இணைந்திருக்கிறார்.

விஜய் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்து 2007ஆம் ஆண்டு வெளிவந்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் பரதன் வேறு எந்தப் படமும் இயக்கியதாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் விஜய்க்காகவே அவர் உருவாக்கி வைத்திருக்கும் சூப்பர் கதை ஒன்று தற்போது விஜய்யின் காதுகளை எட்டியிருக்கிறதாம். அவருக்கும் இக்கதை பிடித்துப்போனதால் படம் குறித்த சீரியஸ் டிஸ்கஷனில் விஜய் வட்டாரங்கள் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அனேகமாக இப்படத்தை ‘வீரம்’ படத்தை தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;