கௌதம் மேனன் + நிவின் பாலி : ‘வாவ்...’ கூட்டணி!

கௌதம் மேனன் + நிவின் பாலி : ‘வாவ்...’ கூட்டணி!

செய்திகள் 30-Oct-2015 9:56 AM IST Chandru கருத்துக்கள்

மலையாள சினிமாவைப் பொறுத்தவரை தற்போதைய ‘ஹாட்டஸ்ட் ஹீரோ’ நம்ம ‘நேரம்’ புகழ் நிவின் பாலிதான். 1983, ஓம் சாந்தி ஒஸானா, பெங்களூர் டேஸ், ஒரு வடக்கன் செல்ஃபி என வரிசையாக அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட் ரகங்கள். அதிலும் சமீபத்தில் வெளியாகி இன்னும் திரையரங்குகளில்கூட வெற்றிகர ஓடிக் கொண்டிருக்கும் ‘பிரேமம்’ ப்ளாக்பஸ்டர் வெற்றி என்பதால், நிவின் பாலியின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறது. அடுத்தடுத்து வித்தியாசமான படங்களாக பார்த்துப் பார்த்து நடித்து வரும் நிவின், தனது புதிய படத்தில் கௌதம் மேனனனுடன் இணைந்து நடிக்கிறார் என்றால், அப்படத்தின் மீது எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்படும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

ஆம்... ‘தட்டத்தின் மறையத்து’ புகழ் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கவிருக்கும் ‘ஜேக்கப்பின்டே ஸ்வர்க்கராஜ்யம்’ எனும் மலையாள படத்தில்தான் நிவின் பாலியும் கௌதம் மேனனும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இவர்களுடன் ரெஞ்சி பனிக்கர், ஸ்ரீநாத் பாஸி, சாய்குமார், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், டி.ஜி.ரவி உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். நோபிள் பாபு தாமஸ் இப்படத்தை தயாரிக்கிறார். படம் 2016 கோடை விடுமுறையில் திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;