‘குக்கூ’ ராஜுமுருகனின் அடுத்த படம்!

‘குக்கூ’ ராஜுமுருகனின் அடுத்த படம்!

செய்திகள் 29-Oct-2015 5:17 PM IST VRC கருத்துக்கள்

‘அட்டகத்தி’ தினேஷ், மாளவிகா நாயர் நடிப்பில் ‘குக்கூ’ என்ற படத்தை இயக்கியவர் ராஜுமுருகன். பத்திரிகையாளராக இருந்து இயக்குனரான இவர் அடுத்து இயக்கும் படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கார்த்தி நடிப்பில் ‘காஷ்மோரா’ என்ற படத்தை தயாரித்து வரும் எஸ்.ஆர்.பிரபுவின் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது தருமபுரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை செழியன் ஏற்றுள்ளார். ‘கல்லூரி’, பாலாவின் ‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’ உட்பட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் செழியன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘முண்டாசுபட்டி’ படத்திற்கு இசை அமைத்த சீன் ரால்டன் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

465 - டிரைலர்


;