அனுஷ்காவை தத்து எடுத்துக் கொண்ட நாசர்!

அனுஷ்காவை தத்து எடுத்துக் கொண்ட நாசர்!

செய்திகள் 29-Oct-2015 1:21 PM IST VRC கருத்துக்கள்

‘பிவிபி சினிமாஸ்’ தயாரித்திருக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ‘ஜீரோ சைஸ்’ என்ற பெயரில் தெலுங்கிலும் உருவாகியிருக்கும் இப்பத்தில் ஆர்யா, அனுஷ்கா, சோனல் சௌஹான், ஊர்வசி, பிரகாஷ் ராஜ் முதலானோர் நடிக்க ‘பாகுபலி’ படப் புகழ் மரகதமணி இசை அமைத்துள்ளார்.
இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் சங்க தலைவரும், நடிகருமான நாசர் பேசும்போது, ‘‘நான் இந்த விழாவுக்கு வந்தது ஒரு நடிகராக இல்லை! நடிகர் சங்க தலைவர் என்ற முறையிலும் இங்கு நான் வரவில்லை! என் மகளுக்காக தான் வந்திருக்கிறேன்! என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? அவர் தான் அனுஷ்கா! அவர் நான் சுவீகாரம் (தத்து) எடுத்துக் கொண்ட என் அன்பு மகள்’’ என்றார்! நாசர் அப்படி கூறியதும் அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

’இஞ்சி இடுப்பழகி’ அனுஷ்கா பேசும்போது, ‘‘நான் இப்படத்தில் கமிட் ஆக முதல் முக்கிய காரணம் இப்படத்தின் ஸ்கிரிப்ட் தான்! தற்போதுள்ள சூழ்நிலையில் ஒவ்வொரு இளம் பெண்களுக்கும் இருக்கிற ஒரு பிரச்சனை நான் குண்டாக இருக்கிறேனா? இல்லை ஒல்லியாக இருக்கிறேனா? என்பது! குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாக வேண்டும் என்று எதை எதையோ செய்கிறார்கள்! இப்படி ஒவ்வொரு இளம் பெண்களுக்கும் மன ரீதியாக பிரச்சனைகள் இருந்துகொண்டே வருகிறது. அப்படியான பெண்களுக்கு நல்ல ஒரு கருத்தை கூறும் படமாக இப்படம் அமையும். இந்த கதை எழுதிய அனாமிகாவுக்கு என் பிரத்தியேகமான நன்றிகள்’’ என்றார்.

கதாநாயகன் ஆர்யா பேசும்போது, ‘‘இப்படத்தில் நடிக்கும்போது எனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை. காரண்ம் என் கேரக்டர் ரொம்பவும் எளிமையானது. ஆனால் ‘ஸ்வீட்டி’ அனுஷ்கா ரொம்பவும் கஷ்டப்பட்டுள்ளார். இந்த படத்திற்காக எடையை கூட்டி, குறைக்க இப்படி நிறைய மெனக்கெட்டுள்ளார். அவரை கமல், விக்ரம் கலந்த ஒரு ஹீரோயின் என்று சொல்லலாம்! ‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு ‘பிவிபி சினிமாஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பான இப்படத்தில் நடித்துள்ளேன். அத்துடன் இவர்களது இன்னொரு தயாரிப்பான ‘பெங்களூர் டேஸ்’ ரீ-மேக்கிலும் நடித்து வருகிறேன். தொடர்ந்து இந்த நிறுவனத்துடன் பயணிப்பதில் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார் ஆர்யா.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் ஒளிப்பதிவை நீரவ்ஷா கவனித்திருக்க, ரூபன் எடிட்டிங்கை கவனித்துள்ளார். இந்த படத்தை இயக்கியிருக்கும் கே.எஸ்.பிரகாஷ் ராவ் தெலுங்கில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான ராகவேந்திர ராவின் புதல்வர் என்பதும், இந்த படத்தின் கதையை எழுதியிருக்கும் கனிகா, இப்படத்தை இயக்கியிருக்கும் கே.எஸ்.பிரகாஷ் ராவின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இஞ்சி இடுப்பழகி’ ஆடியோ விழாவை இன்னொரு ‘இஞ்சி இடுப்பழகி’யான (?) நடிகை ஆர்த்தி கலகலப்பாக தொகுத்து வழங்கினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;