தீபாவளி ரிலீஸில் கடைசி நேரத் திருப்பம்!

தீபாவளி ரிலீஸில் கடைசி நேரத் திருப்பம்!

செய்திகள் 29-Oct-2015 12:03 PM IST Chandru கருத்துக்கள்

கமலின் ‘தூங்காவனம்’ படமும், அஜித்தின் ‘வேதாளம்’ படமும் தீபாவளிக்குதான் ரிலீஸ் என எப்போதோ முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் எந்த படம், எந்த தேதியில் ரிலீஸாகும் என்பதுதான் ரசிகர்களுக்கு பெரிய கேள்வியே. வியாழக்கிழமை சென்டிமென்ட்டை முன்வைத்து ‘வேதாளம்’ திரைப்படம் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே, அதாவது நவம்பர் 5ஆம் தேதியே ரிலீஸாகும் என முதலில் பேசப்பட்டது. பின்னர் நவம்பர் 10ஆம் தேதிதான் வேதாளம் ரிலீஸ் என்றார்கள். அதேபோல் ‘தூங்காவனம்’ முதலில் நவம்பர் 10 வெளியீடு என்றார்கள், பின்னர் நவம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் என்றார்கள். ஆனால், இப்போது சென்சாரெல்லாம் முடிந்துவிட்ட நிலையில், நவம்பர் 10ஆம் தேதிதான் ரிலீஸ் என உறுதிசெய்யப்பட்டிருக்கிறதாம்.

இரண்டு படங்களில் ஏதாவது ஒன்றுதான் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத் திருப்பமாக, வேதாளமும், தூங்காவனமும் ஒரே நாளில் அதாவது நவம்பர் 10ஆம் தேதிதான் ரிலீஸ் என விநியோகஸ்தர் தரப்பிலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸாவதால் எந்த படத்திற்கு, எந்தெந்த தியேட்டர்கள் கிடைக்கும் என இப்போது பரபரக்கத் தொடங்கிவிட்டார்கள்.

(இந்த இரண்டு படங்களோடு நாரதன், பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய படங்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது).

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;