அட்லி படத்திற்காக விஜய் பாடிய பாடல்!

அட்லி படத்திற்காக விஜய் பாடிய பாடல்!

செய்திகள் 29-Oct-2015 10:59 AM IST Chandru கருத்துக்கள்

விஜய் படப் பாடல்கள் எப்போது வெளியானாலும், அதில் முதலில் தேடிப் பிடித்து இளையதளபதி ரசிகர்கள் கேட்பது விஜய் பாடிய பாடலைத்தான். துப்பாக்கி, தலைவா, ஜில்லா சமீபத்தில் வெளியான ‘புலி’ வரைக்கும் தனது படங்களில் விஜய் தொடர்ந்து பாடி வருகிறார். இதேபோல, அட்லி இயக்கும் படத்திலும் விஜய் பாடுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 50வது படமாக உருவாகிவரும் இப்படத்தின் பாடல்கள் உலக தரலோக்கலாக இருக்கும் என ஜி.வி.யே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது படத்தில், விஜய் பாடியது குறித்து இயக்குனர் அட்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களுடன் தகவல் வெளியிட்டிருக்கிறார். அதில், ‘‘விஜய் 59 படத்திற்காக விஜய்ணா பாடல் பாடி முடித்துவிட்டார். பாடல் பதிவு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மேலும் தகவல்களை விரைவில் அறிவிக்கிறேன். லவ் யூ ஆல்’’ என தெரிவித்திருக்கிறார் அட்லி.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;