‘இது நம்ம ஆளு’ ரிலீஸ் எப்போது? - இயக்குனர் பாண்டிராஜ்

‘இது நம்ம ஆளு’ ரிலீஸ் எப்போது? - இயக்குனர் பாண்டிராஜ்

செய்திகள் 29-Oct-2015 10:42 AM IST Chandru கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் என்றதுமே ‘இது நம்ம ஆளு’ படத்தின் மீது பரபரவென எதிர்பார்ப்பு ஏறத் தொடங்கியது. கூடுதலாக, 9 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நயன்தாராவும் நடிப்பதால் அந்த எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கானது. தவிர சூரி, சந்தானம் என இரண்டு காமெடியர்கள், சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாவது என பல விஷயங்களும் இப்படத்திற்கு பெரிய பாசிட்டிவ்வாக அமைந்தன. படமும் விறுவிறுவென வளர்ந்து இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், தேவையில்லாத சில சலசலப்புகள் படக்குழுவினரிடையே ஏற்பட்டன. இயக்குனர் பாண்டிராஜுக்கும், குறளசனுக்கும் ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டது. அதோடு ஒரு சில காட்சிகள், 2 பாடல்களுக்கான படப்பிடிப்பு நீண்டநாட்களாக நடைபெறாமலேயே இருந்தது. இதனால் ‘இது நம்ம ஆளு’ படத்தின் ரிலீஸும் ‘வாலு’ கதையாகிவிடுமோ என ரசிகர்கள் ரொம்பவே நொந்து போனார்கள். ஒருவழியாக தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்களை இயக்குனர் பாண்டிராஜ் அறிவித்திருக்கிறார்.

‘‘எடிட்டிங், டிரைலர் உட்பட என் பக்க வேலைகள் அனைத்தையும் நான் முடித்துவிட்டேன். தயாரிப்பாளர் பக்கமிருந்து என்ன பதில் வரும் என உங்களைப்போலவே (ரசிகர்கள்) நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசை வெளியீடு, பட ரிலீஸ் குறித்து அறிவிப்பது என் கையில் இல்லை. தயாரிப்பாளர் மட்டுமே இதுபற்றி முடிவெடுக்க முடியும். நவம்பரில் பாடல்களும், டிசம்பரில் படமும் வெளியாகும் என நான் நம்புகிறேன்..’’ என ட்வீட் மூலம் ரசிகர்களுக்கு பதிலளித்திருக்கிறார் பாண்டிராஜ். அதோடு ‘இது நம்ம ஆளு’ படத்தின் ஆடியோ சிடி கவரையும் நேற்று வெளியிட்டார்கள். அதனை ரசிகர்கள் ட்ரென்ட்டுக்கு கொண்டு வந்தார்கள். இதன் பிறகு, ‘‘அட பாவிகளா !!!! ஒரு CD கவரு விட்டதே....trending ஆ!!!! அப்ப படத்தெ விட்டா!!! சீக்கிரம் விடுங்கப்பா plzzzz.... ’’ என்றும் அவர் ட்வீட் செய்தார்.

இயக்குனர் பாண்டிராஜின் நம்பிக்கை நிறைவேறட்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - டீசர்


;