தனுஷுக்குத் தந்தையாகிறார் விஜய்யின் அப்பா!

தனுஷுக்குத் தந்தையாகிறார் விஜய்யின் அப்பா!

செய்திகள் 29-Oct-2015 10:33 AM IST Chandru கருத்துக்கள்

விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் நடிகர் தனுஷும் ஒருவர். அதோடு விஜய்யின் ரசிகரும் ஆவார். இதனால் தனுஷ் படங்களுக்கு எப்போதுமே ‘இளையதளபதி’ ரசிகர்களின் ஆதரவு உண்டு. இந்நிலையில் தனுஷ் புதிததாக நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு தந்தையாக விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி. நடிக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. ‘தங்கமகன்’ படப்பிடிப்பு முடிந்து, தற்போது பிரபுசாலமன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.

இப்படத்திற்குப் பிறகு, எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார் தனுஷ். அண்ணன், தம்பி என இரட்டை வேடங்களில் தனுஷ் நடிக்கும் இப்படத்தில்தான் அவருக்கு தந்தையாக நடிக்கிறார் எஸ்.ஏ.சி. அடுத்த வருடம் ஜனவரியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடி - டிரைலர்


;