‘தூங்காவனம்’ சென்சார் ரிசல்ட்?

‘தூங்காவனம்’ சென்சார் ரிசல்ட்?

செய்திகள் 29-Oct-2015 10:17 AM IST Chandru கருத்துக்கள்

‘ஸ்லீப்லெஸ் நைட்’ என்ற பிரெஞ்ச் நாவலை மையமாக வைத்து கமலின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தூங்காவனம்’ திரைப்படம் தீபாவளி ரிலீஸுக்காக பரபர வேலைகளில் இருக்கிறது. கமலிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். கமலுடன் இப்படத்தில் த்ரிஷா, பிரகாஷ் ராஜ், கிஷோர், மது ஷாலினி, ஆஷா சரத், உமா ரியாஸ்கான், யூகி சேது, சம்பத்ராஜ் உட்பட பலரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் விஸ்வரூபம், உத்தம வில்லன், பாபநாசம் படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக கமலுடன் இணைந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

ஒரு நாளில் நடக்கும் பரபர சம்பவங்களே இப்படத்தின் கதைக்களம். ஆக்ஷன் காட்சிகள் அதிகமிருக்கும் இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். 2 மணி 5 நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் ஒரேயொரு பாடல் மட்டுமே. தீபாவளியை முன்னிட்டு இப்படம் நவம்பர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;