கணேஷ் வெங்கட்ராமுக்கு பிடித்த போலீஸ் கேரக்டர்?

கணேஷ் வெங்கட்ராமுக்கு பிடித்த போலீஸ் கேரக்டர்?

செய்திகள் 28-Oct-2015 1:40 PM IST VRC கருத்துக்கள்

‘பெஸ்ட் ரிலீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.ஈ.பி தம்பி தயாரித்துள்ள படம் ‘பள்ளிக்கூடம் போகாமலே’. பி.ஜெயசீலன் இயக்கியுள்ள இப்படத்தில் புதுமுகங்கள் தேஜஸ், ஐஸ்வர்யா, திலீபன் புகழேந்தி ஆகியோருடன் கணேஷ் வெங்கட்ராம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இம்மாதம் 30-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தது குறித்து கணேஷ் வெங்கட்ராம் கூறும்போது,

‘‘நான் ஏற்கெனவே பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். அதனால் இப்படத்தில் மீண்டும் போலீஸாக நடிக்க அழைத்தபோது முதலில் மறுத்தேன். ஏன் என்றால் ஒரு இடைவெளி வேண்டும் என்பதற்காக! அப்போது இப்படத்தின் இயக்குனர் ஜெயசீலன், ‘சார், இந்த கதையை நீங்க ஒரு முறை கேளுங்கள்! அதற்கப்புறம் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் ஓகே’ என்றார்! அவர் விருப்பத்தின் பேரில் கதையை கேட்டேன்! கதையை கேட்டு முடித்ததும், ஒருவேளை இந்த கதையை நான் கேட்காமல் இருந்திருந்தால் ஒரு நல்ல படத்தை நான் மிஸ் பண்ணியிருப்பேன் என்பதை உணர்ந்தேன்!

தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளி மாணவ, மாணவியர் ஏன் தற்கொலை செய்கிறார்கள்? ஏன் பள்ளிக் கூடத்திலேயே கொலை போன்ற வன்முறைகள் எல்லாம் நடக்கிறது? பள்ளி மாணவ மாணவியர் ஏன் கடத்தப்படுகிறார்கள்? இதற்கெல்லாம் காரணம் என்ன? இது போன்ற கேள்விளுக்கு எல்லாம் பதில் தரும் படமாக அமைந்திருக்கிறது ‘பள்ளிக்கூடம் போகாமலே’. இந்த கதையில் நான் அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனராக நடித்துள்ளேன். நான் இதுவரை நடித்த போலீஸ் வேடங்களிலேயே இப்படத்தின் போலீஸ் கேரக்டர் தான் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. ஏன் என்றால் சமூக அக்கறையோடு சொல்லப்பட்டுள்ள இந்த கதையில் என் பங்களிப்பும் இருக்கிறது என்ற விஷயம் தான்! அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது’’ என்றார்!

யூ.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம்சன் கோட்டூர் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;