‘ஆச்சி’யால் அறிமுகப்படுத்தப்பட்ட அழகிய தமிழ் மகள்!

‘ஆச்சி’யால் அறிமுகப்படுத்தப்பட்ட அழகிய தமிழ் மகள்!

செய்திகள் 28-Oct-2015 12:16 PM IST VRC கருத்துக்கள்

தமிழகப் பெண்களின் அழகு, பெண்மை, பாரம்பரியம் ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் விதமாக ‘அழகிய தமிழ் மகள்’ என்ற தலைப்பில் ஒரு அழகுப் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்த போட்டி குறித்து அதன் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம் வருமாறு:

இந்த போட்டியின் நோக்கம் உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் தமிழ் பண்பாடையும், பெண்மையையும், அழகையும் பாராட்டுவதுதான்! இந்த போட்டியில் 'அழகிய தமிழ் மகள்' மகுடம் போக, 15 பட்டங்களும் வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. .மூன்று சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் போட்டியாளர்களின் திறமையையும் அறிவையும் சோதிக்கும் மூன்று சுற்றுகள் உள்ளன. 18 முதல் 25 வயது உள்ள உலக தமிழ் பெண்கள் இதில் கலந்து கொள்ள azhagiyatamilmagal.com/submit என்னும் வலை தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சிகான லோகோவை சமீபத்தில் அறிமுகப்படுத்தி வைத்தவர் மறைந்த பத்மஸ்ரீ ‘ஆச்சி’ மனோரமா தான்! இந்த போடிக்கு கருண் ராமன் ((ஃபேஷன் வடிவமைப்பாளர்) மற்றும் தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள், அழகியல் நிபுணர்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;