ஹாலிவுட்டில் கால் பதிக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஹாலிவுட்டில் கால் பதிக்கும் யுவன் சங்கர் ராஜா!

செய்திகள் 28-Oct-2015 11:53 AM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜாவும் ஹாலிவுட்டில் கால் பதிக்கிறார். ஹாலிவுட்டில் உருவாகும் சயன்ஸ் ஃபிக்‌ஷன் அனிமேஷன் படம் ‘Woolfell’. ‘ஹாரிகேன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்குபவர் பிரபாகரன். இப்படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பினை யுவன் சங்கர் ராஜா ஏற்றுள்ளார். யுவன் இசை அமைக்கும் முதல் ஹாலிவுட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் எடிட்டிங் பொறுப்பை ஏற்றுள்ள கே.எல்.பிரவீன், சவுன்ட் டிசைனராக பணியாற்றும் குணால் ராஜன் ஆகியோரும் இந்தியாவை சேர்ந்தவர்களே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ


;