50 பேய்களுடன் ‘சவுகார்பேட்டை’ கிளைமேக்ஸ்!

50 பேய்களுடன் ‘சவுகார்பேட்டை’ கிளைமேக்ஸ்!

செய்திகள் 28-Oct-2015 11:23 AM IST VRC கருத்துக்கள்

‘மைனா’, ‘சாட்டை’, ‘கும்கி’ ஆகிய படங்களை தயாரித்த ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘சவுகார்பேட்டை’. ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி, சுமன், வடிவுக்கரசி, ரேகா, சரவணன் முதலானோர் நடிக்கும் இப்படத்தை வி.சி.வடிவுடையான் இயக்கி வருகிறர். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன். இப்படம் குறித்து இயக்குனர் வடிவுடையான் கூறும்போது,
‘‘பேய் பட வரிசையில் இது மாறுபட்ட ஒரு படமாக இருக்கும். ஸ்ரீகாந்த, ராய் லட்சுமி, வடிவுக்கரசி என படத்தில் நடித்திருக்கும் பெருமாலானோரும் பேயாக வருவார்கள். நல்ல பேய்க்கும், கெட்ட பேய்க்கும் இடையில் நடக்கும் போராட்டங்களை மெய்சிலிர்க்க வைக்கும் விதமாக படமாக்கியுள்ளோம். படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் 50 பேய்கள் ஒன்றாக வந்து மோதுவது மாதிரி படமாக்கியுள்ளோம். இந்த காட்சி பரபரப்பாகவும், த்ரில்லிங்காகவும் இருக்கும். இது தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும்’’ என்கிறார்.

‘காஞ்சனா-2’, ‘மாயா’ உட்பட பல வெற்றிப் படங்களை வெளியிட்ட ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தினர் தான் இப்படத்தையும் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சவுகார்பேட்டை - டிரைலர்


;