அஜித் பற்றிய அவதூறு செய்தி! - கருணாஸ் விளக்கம்

அஜித் பற்றிய அவதூறு செய்தி! - கருணாஸ் விளக்கம்

செய்திகள் 28-Oct-2015 9:32 AM IST Chandru கருத்துக்கள்

சமீபகாலமாக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலமாகவும், ஃபோட்டோஷாப் வேலைகள் வாயிலாகவும் பிரபலங்களின் பெயரில் விஷமிகள் பல தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். சமீபத்தில்... ‘அஜித்திற்கு ஹார்ட் அட்டாக்... பிரார்த்தனை செய்யுங்கள்’ என்ற தவறான தகவலை அஜித்தின் மேனஜருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியிட்டதுபோன்று ஃபோட்டோஷாப்பில் வேலை செய்து அவதூறு பரப்பினர். அதற்கு உடனடியாக விளக்கமளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மேனேஜர் சுரேஷ் சந்திரா. தற்போது நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவருமான கருணாஸின் ட்விட்டரிலிருந்து அஜித் பற்றிய அவதூறு செய்தியை விஷமிகள் பரப்பியுள்ளனர். இந்த தகவல் கருணாஸை எட்டியதும் உடனடியாக இதுகுறித்து விளக்கமளித்து பத்திரிகை செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்...


அன்புள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு,

வணக்கம். என்னுடைய ட்விட்டர் கணக்கில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறாக செய்திகளை கூறியதாக இன்று செய்தி வெளிவந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். யாரோ விஷமிகள் என்னுடைய ட்விட்டர் கணக்கில் இப்படி ஒரு தவறான முறையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். ஆரம்ப காலகட்டம் முதல் இன்று வரை நான் அனைத்து நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி வந்துகொண்டிருக்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்த்தை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது பற்றி நாளை கமிஷ்னரிடம் முறையாக புகார் அளிக்கவுள்ளேன். என்னை பற்றிய தவறான செய்திகளை கேள்விபடும் போது அந்த செய்தியை பிரசுரிக்கும் முன் எனக்கு தெரியபடுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

நன்றி.
அன்புடன், கருணாஸ்
நடிகர், துணை தலைவர் – தென்னிந்திய நடிகர் சங்கம்

என கருணாஸ் அனுப்பியிருக்கும் பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விசிறி - டிரைலர்


;