ரஜினியை கௌரவப்படுத்திய மலேசிய கவர்னர்!

ரஜினியை கௌரவப்படுத்திய மலேசிய கவர்னர்!

செய்திகள் 27-Oct-2015 1:21 PM IST VRC கருத்துக்கள்

ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்ததை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக இயக்குனர் ரஞ்சித் உட்பட ‘கபாலி’ படக் குழுவினர் மலேசியா சென்றுள்ளனர். அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியும் நேற்று காலை மலேசியா பயணமானார். அவருடன் படத்தின் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணுவும் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் மலேசியாவில் உள்ள மலேகா என்ற மகாணத்தின் கவர்னரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். அப்போது ரஜினிகாந்தை வரவேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்த கவர்னர், ரஜினி மற்றும் தாணுவிற்கு சிறப்பான முறையில் தேனீர் விருந்தும் அளித்துள்ளார்.

மலேசியாவில் ‘கபாலி’யின் படப்பிடிப்பு நாளை துவங்கவிருக்கிறது. அங்குள்ள ஒரு முருகன் கோவிலில் துவங்கும் படப்பிடிப்பு தொடர்ந்து மலேசியாவின் பல இடங்களிலாக பல நாட்கள் நடைபெறவிருக்கிறது. மலேசியாவை தொடர்ந்து ஜப்பான், தாய்லாந்த் ஆகிய நாடுகளிலும் ‘கபாலி’யின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. ‘கபாலி’யின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் மட்டும் 60 நாட்கள் நடைபெறவிருக்கிறதாம். இந்த படப்பிடிப்புகள் முடிந்த பிறகு தான் ரஜினி சென்னை திரும்புவாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;