கல்லூரி விழாவில் குடும்பத்தினரை நெகிழ வைத்த சிவகுமார்!

கல்லூரி விழாவில் குடும்பத்தினரை நெகிழ வைத்த சிவகுமார்!

செய்திகள் 27-Oct-2015 11:19 AM IST VRC கருத்துக்கள்

இன்று (27-10-15) நடிகர் சிவகுமாரின் 75-ஆவது பிறந்த நாள்! இதையொட்டி நேற்று சிவகுமார் தனது குடும்பத்தினருடன் பழனி தண்டாயுதபாணி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் நடந்த விழாவிலும் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் சிவகுமார். இந்த கல்லூரி விழாவில் மகாபாரத வரலாறை 2 மணி 15 நிமிடங்களில் சுருக்கமாக பேசி கல்லூரி மாணவியர் மற்றும் விழாவில் கலந்துகொண்டவர்களின் பாராட்டை பெற்றார் சிவகுமார்! மிகப் பெரிய ஒரு சரித்திர கதையான மகாபாரத கதையை இரண்டே கால் மணி நேரத்தில் சுருக்கமாக சொல்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை! அதை சிறப்பாக நிகழ்த்தி காட்டியுள்ளார் சிவகுமார்! இதற்காக அவர் இரண்டு ஆண்டு காலம் பயிற்சி மேற்கொண்டராம்!

இதைப்போல ஏற்கெனவே இதே கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் இராமாயண சரித்திரத்தையும் இரண்டே கால் மணி நேரத்தில் சொல்லி பெரும் பாராட்டு பெற்றுள்ளார்! ஆனால் அப்போது அதை நேரடியாக கண்டு களிக்கும் வாய்ப்பு அவரது குடும்பத்தினருக்கு அமையவில்லை. ஆனால் இந்த வருடம் நடந்த விழாவில் சிவகுமாருடன் அவரது மனைவி, மகன்கள் சூர்யா, கார்த்தி, மகள் பிருந்தா, மருமகள்கள் ஜோதிகா, ரஞ்சனி, மருமகன் சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். விழா மேடையில் மகாபாரத கதையை இரண்டேகால் மணி நேரத்தில் சிவகுமார் விளக்கி முடித்ததும், மாணவிகளின் கரகோஷ ஒலியால் அந்த அரங்கமே அதிர்ந்தது! அது மட்டுமல்லாமல் சூர்யாவும், கார்த்தியும் அவரை கட்டிப் பிடித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்ட நிகழ்வும் அனைவரையும் நெகிழ வைத்தது. இந்த உணர்ச்சி மிகு விழா சிவகுமாரின் 75ஆவது பிறந்த நாளுக்கு ஒரு மணிமகுடமாக அமைந்தது!

நடிப்புக் கலை மட்டுமின்றி ஓவியம், இலக்கியம், சரித்திரம், சமூக சேவை என பல துறைகளிலும் சாதித்து வரும் திரையுலக ‘மார்கண்டேயன்’ சிவகுமாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;