வசூல் வேட்டையில் ‘நானும் ரௌடிதான்‘ - 6 நாள் கலெக்ஷன்?

வசூல் வேட்டையில் ‘நானும் ரௌடிதான்‘ -  6 நாள் கலெக்ஷன்?

செய்திகள் 27-Oct-2015 11:09 AM IST Chandru கருத்துக்கள்

எதிர்பார்த்ததைப்போலவே ஒரு படம் வெற்றிபெறும்போது அதில் பணியாற்றிய அனைவருக்குமே பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும். அப்படி ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறது தனுஷ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & நயன்தாரா நடித்திருக்கும் ‘நானும் ரௌடிதான்’ படம். டீஸர், டிரைலர், அனிருத்தின் சூப்பர்ஹிட் பாடல்கள் என எல்லாமே, இப்படம் வெளிவருவதற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. எதிர்பார்த்ததைப் போலவே படமும் சுவாரஸ்யமாக இருக்க, ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிட்டனர். இதனால் இப்படம் முதல் 5 நாட்களிலேயே (ஆயுதபூஜை விடுமுறை வேறு) தமிழகத்தில் மட்டும் 9.75 கோடிகளை வசூலித்து அசத்தியது. அதோடு படத்தின் ‘டாக்’ நன்றாக இருப்பதால் வேலைநாளான நேற்றும் (அக்டோபர் 26) 70 சதவிகித அளவில் தியேட்டர் நிறைந்ததால், 1.50 கோடியை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் முதல் 6 நாட்களில் ‘நானும் ரௌடிதான்’ படம் தமிழகத்தில் மட்டும் 11.25 கோடியை வசூலித்துள்ளதாக நம்பத்தகுந்த விநியோகஸ்தரிடமிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறதாம். விஜய்சேதுபதியின் கேரியரில் இப்படம் பெரிய வசூலைக் குவித்த படமாக அமையும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;