புதிய படத்தில் இணையும் பேய்ப்பட ஜோடி!

புதிய படத்தில் இணையும் பேய்ப்பட ஜோடி!

செய்திகள் 27-Oct-2015 10:43 AM IST Chandru கருத்துக்கள்

‘டார்லிங்’கில் பேயாக வந்து ரசிகர்களை ஒரு மிரட்டு மிரட்டிய நடிகை நிக்கி கல்ராணியும், ‘முனி’ படவரிசைகளின் மூலம் ரசிகர்களை கதிகலங்க வைத்த நடிகர் ராகவா லாரன்ஸும் புதிய படமொன்றில் இணைகிறார்களாம். தெலுங்கில் இந்த வருடத்தின் முதல் வெற்றிப் படம் என்ற பெருமையைப் பெற்ற ‘பட்டாஸ்’ படத்தின் தமிழ் ரீமேக்கில்தான் இந்த பேய்ப்பட ஜோடி இணையவிருக்கிறது. இப்படத்தை ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க, சாய் ரமணி இயக்குகிறார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கோ 2, விஷ்ணுவுடன் ஒரு படம் என நடிகை நிக்கி கல்ராணி பிஸியாக இருக்கிறார். அதேபோல் வேந்தர் மூவிஸிற்காக நாகா, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்களை இயக்கி நடிக்கும் வேலைகளில் ராகவா லாரன்ஸும் பிஸியாக இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - பாடல் வீடியோ


;